கனேடிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஆல்பர்ட்டா மாகாணம்?
கனடாவின் எண்ணெய் வளம் நிறைந்த மாகாணமான ஆல்பர்ட்டா, கனடியக் கூட்டமைப்பிலிருந்து பிரிவது குறித்து கட்டாய வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்க பொது வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஆல்பர்ட்டா கனடாவின் ஒரு பகுதியாகவே நீடிப்பதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், மாகாணங்கள் தன்னிச்சையாகப் பிரிந்து செல்ல முடியாது என்பதால், சுதந்திரம் பெறுவதற்கு மத்திய அரசுடன் சிக்கலான பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.




