ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு
சவூதி அரேபியாவில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் ஹூதிகளின் தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவைப்பட்டால் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டு 2028-ஆம் ஆண்டில் நடத்தப்படலாம் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆசியாவின் முதன்மையான இந்த கால்பந்து தொடர் குறித்து முடிவெடுப்பதில் தங்களுக்கு எந்த அவசரமும் இல்லை என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல்-கலிஃபா கூறியுள்ளார்.
2027-ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர், சவூதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத் மற்றும் அல் கோபார் ஆகிய நகரங்களில் ஜனவரி 7-ஆம் திகதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




