வானிலை மாற்றம் : பல பகுதிகளில் வெப்பநிலை உயர்வு!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (25) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (26) முதல் அமலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு பகல் நேரத்தில் “கணிசமான” அளவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





