வரி பணம் வீணடிப்பு – பணியிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிக்கு 8,60,000 பவுண்டுகள் இழப்பீடு
பணியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு அரசு அதிகாரிக்கு 8,60,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்க சர் கீர் ஸ்டார்மர் எடுத்த முடிவு, “வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும் ஒரு அதிர்ச்சிகரமான செயல்” என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் உயர்மட்ட அரசு அதிகாரியான சர் கிறிஸ் வோர்மால்ட் Sir Chris Wormald , அமைச்சரவைச் செயலாளர் (Cabinet Secretary) என்ற உயரிய பதவியில் வெறும் 14 மாதங்களே இருந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு 8,60,000 பவுண்டுகள் என்ற உயரியத் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது.
இது வரி செலுத்தும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பீட்டர் மண்டல்சன் Lord Mandelson நியமனம் தொடர்பான சர்ச்சையைச் சுற்றியுள்ள கடுமையான அரசியல் அழுத்தம் மற்றும் நிலையற்ற சூழலில், தனது பிரதமர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட ஒரு கடைசி முயற்சியாகவே சர் கீர் அந்த அதிகாரியைப் பணிநீக்கம் செய்தார் என்று கூறப்படுகிறது.
பதவியிலிருந்து நீக்கப்பட்ட அந்த உயர்மட்ட அரசு அதிகாரி, ஜூலை மாதத்தில் பிரபுக்கள் சபையில் (House of Lords) உறுப்பினராக (peerage) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இணையவுள்ளார்.




