ஐரோப்பா

லித்துவேனிய வான்வெளிக்குள் நுழைந்த மர்ம ட்ரோன் – நேட்டோ படையினரால் அழிப்பு

லித்துவேனிய வான்வெளிக்குள் நுழைந்த ட்ரோன் ஒன்றை நேட்டோ படையினர் இன்று மாலை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

அந்த ட்ரோன் அண்டை நாடான பெலாரஸிலிருந்து நாட்டிற்குள் நுழைந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், உடனடியாக செயற்பட்ட நேட்டோ படையினர் 30 நிமிடங்களில் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லித்துவேனியப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் ட்ரோன் இதுவாகும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி, கூட்டணிப் படையினரின் விரைவான பதிலுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்றார்.

உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், இத்தகைய தயார்நிலை நமது பிராந்தியத்திற்கு மிகவும் இன்றியமையாதது எனக் கூறிய அவர், நமது நேட்டோ கூட்டாளிகளுடன் இணைந்து, லிதுவேனியா தனது வான்வெளியைப் பாதுகாக்கும் என்றார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்