ஐரோப்பா செய்தி

இத்தாலியின் தேர்தல் சட்டத் திருத்தத்துக்கு மேலவை ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

இத்தாலியின் தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு அந்நாட்டுச் செனட் சபை (மேலவை) செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தாலியின் தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சீர்திருத்தத்திற்கு அந்நாட்டுச் செனட் சபை (மேலவை) செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் வெற்றிபெறும் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலேயே பிரதமர் ஜோர்ஜியா மெலோனி விதிகளில் மாற்றம் செய்வதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன.

பிரதமர் மெலோனியின் ‘பிரதர்ஸ் ஆப் இத்தாலி’, ‘லீக்’ மற்றும் ‘போர்சா இத்தாலியா’ ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய வலதுசாரி ஆளும் கூட்டணி, முற்றிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலான (proportional voting system) தேர்தல் சீர்திருத்தத்தைச் சமர்ப்பித்துள்ளது.

இதன் மூலம், தேர்தலில் 42 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் எந்தவொரு கூட்டணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இச் சட்டமூலம் இறுதி ஒப்புதலுக்காக இத்தாலியின் கீழ் சபைக்கு (Chamber of Deputies) மீண்டும் அனுப்பப்படவுள்ளது.

தற்போதைய அமைப்பின் கீழ், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலமும், மூன்றில் ஒரு பகுதியினர் (First-past-the-post) தொகுதி முறை மூலமும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இத் தொகுதி முறை மைய-இடதுசாரி எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமையக்கூடும் எனப் பகுப்பாய்வாளர்கள் கருதும் நிலையில், புதிய சீர்திருத்தம் இம்முறையை முற்றாக ஒழிக்க முனைகின்றது.

113 ஆதரவு வாக்குகளுடனும் 71 எதிர் வாக்குகளுடனும் நிறைவேற்றப்பட்ட இச் சீர்திருத்தம், குறுகிய கால அரசாங்கங்களுக்குப் பெயர் போன இத்தாலியில் நிலையான ஆட்சியை உறுதி செய்யும் என ஆளும் கூட்டணி தெரிவித்தது.

2022 இல் பதவியேற்ற மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான இத்தாலிய வரலாற்றில் மிக நீண்ட காலம் நீடித்த அரசாங்கத்தின் தலைவராகவும் இம்மாதம் உருவெடுத்

ஜூலை மாதம் இச் சீர்திருத்தம் கீழ் சபையில் முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்ட போது, மெலோனிக்குச் பின்னடைவு ஏற்பட்டது.

கட்சிப் பட்டியலிலிருந்து வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘முன்னுரிமை வாக்குமுறையை’ (preferential voting) மீண்டும் கொண்டுவருவதற்கான அவரது முன்மொழிவு, ஆளும் கூட்டணிக் உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்புத் துரோகத்தால் மயிரிழையில் தோற்கடிக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி