9 வருடங்களுக்கு பிறகு விக்கெட் ஒன்றை வீழ்த்திய விராட்
உலகக்கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், இந்தியா – நெதர்லாந்து அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் குறிப்பாக, இந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களான, சுப்மன் கில், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் பவுலிங் செய்தனர்.
அதிலும், விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 3 ஓவர்களை வீசிய விராட் கோலி, 13 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதற்கு முன் விராட் கோலி 9 வருடங்களுக்கு முன் விக்கெட்டை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும், தனது முதல் ஓவரை வீச வந்த கேப்டன் ரோகித் சர்மா, அதே ஓவரில் விக்கெட்டும் எடுத்தார். கில், சூர்யகுமார் ஆகியோர் தலா 2 ஓவர்களை வீசினர்.