பொழுதுபோக்கு

“இந்த இடத்தில் எப்படி டிரஸ் போடவேண்டும்” BB சரவெடி ஆட்டம் ஆரம்பம்…

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று நாமினேஷன் சுற்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், மணி சந்திரா, அக்ஷயா, ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, விசித்ரா, சரவணன் விக்ரம், அனன்யா ராவ், பாவா செல்லத்துரை மற்றும் விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களில் முதல் வாரத்திற்குப் பிறகுதான் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்து கொள்வார்கள் என்பதால்,முதல் வாரம் நாமினேஷன் இருக்காது. ஆனால் இந்த சீசனில் இரு வீடுகள் மற்றும் இரட்டை நாமினேஷன் முறை அமலுக்கு வந்துள்ளதால், முதல் நாளே நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.

இதில் விசித்ரா அனன்யா மற்றும் ஐஷு ஆகியோரை நாமினேட் செய்து விட்டு, இந்த வீட்டில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவரும் இருக்கிறார்கள். இந்த இடத்தில் எப்படி டிரஸ் போடவேண்டும் என அனன்யாவிற்கு தெரியவில்லை. இதனால், நான் அவரை நாமினேட் செய்கிறேன் என்றார்.

இந்த காரணத்தால் சிலர் நாமினேட் செய்யவில்லை என்று சிலர் நாமினேட் செய்து இருப்பதாக பிக் பாஸ் தெரிவித்ததை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர் கடுப்பாகி. டிரஸ் பத்தி எல்லாமா பேசுவாங்க. நாங்க இப்படித்தான் டிரஸ் போடுவோம், பிடிக்கலனா அவங்க வெளியில் போகட்டும் என்று பேசி இருந்தனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்