‘ஏஹிபஸ்ஸிகோ’ குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும், பௌத்த மதத்தின் உரிமையை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்வதற்குமாக இலங்கையில் 07 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணத்தை நிறைவு செய்துகொண்டு, வியட்நாம் தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று (29) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம் தேரர் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட பிக்குகள், ‘அலோகா’ நாய் மற்றும் ஏனையோர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் நோக்கிப் புறப்பட்டனர்.
அங்கிருந்து அவர்கள் மற்றுமொரு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளனர்.





