இலங்கை செய்தி

கலைப்பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவி

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி ராமகுமார் கவிப்பிரியா கலைப்பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.

இவ் மாணவி கலைப்பிரிவில் விவசாய விஞ்ஞானம், புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் 3A சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் S பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 194 ஆவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதனிடையே, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி உயிரியல் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி ஒருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் உயிரியல் பிரிவில் பிரமுதி பஷானி முனசிங்க என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, 2022 (2023) ஆண்டின் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின்படி கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவன் பௌதீகவியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதன்படி, பௌதீகவியல் பிரிவில் கோனதுவகே மானெத் பனுல பெரேரா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை