ஐரோப்பா

நியூசிலாந்தில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்வு

நியூசிலாந்தின் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

நியூசிலாந்து புள்ளியியல் துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை விகிதம் 5.7% ஆக உயர்ந்துள்ளது. இது 2015-க்குப் பிறகு இல்லாத உச்சபட்ச அளவாகும்.

வேலைவாய்ப்பு முந்தைய காலாண்டிலிருந்து 0.1% குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது, நாட்டின் தேர்தல் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார மற்றும் பணவீக்க அழுத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, மற்றொரு பதவிக்காலத்தை நாடும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனுக்கான சவாலையும் கூர்மையாக்குகிறது.

அத்துடன் நவம்பர் 07 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்குள் அவர்கள் பொருளாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிகைகள் எடுக்க வேண்டியதன் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்