ஹோர்முஸில் பெரும் பதற்றம்: 4 எண்ணெய்க் கப்பல்கள் தீக்கிரை
ஹோர்முஸ் நீரிணைக்கு தெற்கே தடை செய்யப்பட்ட பாதை எனக் குறிப்பிடப்பட்ட கடல் வழியாகச் செல்ல முயன்றபோது, கடற்படைக் கண்ணிவெடிகளில் சிக்கி நான்கு எண்ணெய்க் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணிவெடிகளில் சிக்கிய நான்கு எண்ணெய்க் கப்பல்களும் தொடர்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு கப்பல்களைத் தமது படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.




