ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைன் அமைதி முயற்சி; பெர்லினில் ஒன்றிணையும் ஐரோப்பிய சக்திகள்

உக்ரைனுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், ஜெர்மனியின் பெர்லினில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இன்று (19) சந்திக்கவுள்ளனர்.

உக்ரைனுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், ஜெர்மனியின் பெர்லினில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இன்று (19) சந்திக்கவுள்ளனர்.

ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, போலந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டேவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் போருக்குப் பின்னரான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து இதன்போது முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள கவலைகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னரும் பங்கேற்கவுள்ளனர்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் ரஷ்யாவுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சீனாவில் சந்திக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

சீனாவில் நடைபெறும் இந்த சந்திப்பில், ஐரோப்பாவின் பங்களிப்பு இன்றி உக்ரைன் போர் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலம் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே அதிகரித்துள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி