கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து – 18 பேர் மாயம்
கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 54 பேர் காயமடைந்ததாகவும், 18 பேரைக் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரின் போது ஈரான் நடத்திய குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, தொழிலாளர்கள் பணிகளை மீண்டும் தொடங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பர்சான் எரிவாயு விநியோக மையத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பர்சான் ஆலையின் கொள்ளளவு ஒரு நாளைக்கு சுமார் 1.4 பில்லியன் ஸ்டாண்டர்ட் கன அடி எரிவாயு ஆகும்.
இந்த வெடிவிபத்து, உலகளாவிய எரிசக்தி சந்தைகளை மேலும் சீர்குலைக்கக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




