உலகம்

பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில்  மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின்  தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

பாடசாலைக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள்   துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்து, விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்