ஐரோப்பா செய்தி

பிரிட்டன் பொருளாதாரத்தை தாக்கிய ‘ஈரான் போர்’!

ஈரான் போரானது சர்வதேச பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், பிரிட்டன் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் பொருளாதாரம் 0.1 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகளாவிய வர்த்தகத்திற்கான முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, எரிசக்தி விலைகள் எகிறின.

இதன் காரணமாக, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் காட்டிய வலுவான வளர்ச்சி, தற்போது தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது.

பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே கணித்திருந்தபடியே, ஏப்ரல் மாதத்தில் மொத்த தேசிய உற்பத்தி 0.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும், மார்ச் மாதத்தில் 0.3 சதவீத வளர்ச்சி பதிவாகியிருந்ததாக பிரிட்டன் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இத்தரவுகள், நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரம் மேலும் சுருங்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையிலும் பிரிட்டன் பொருளாதாரம் வலுவாகவே இருந்ததாகக் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி