USAவின் முக்கிய இராணுவ தளத்தின் மேல் தோன்றிய UFO!!
அமெரிக்க பாதுகாப்பு துறை அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) தொடர்பான மூன்றாவது தொகுதி ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் வானத்தில் ஒளிரும் “கோளங்களை” நேரில் கண்ட மக்களின் சமீபத்திய நேரடி அனுபவக் குறிப்புகள் அடங்கியுள்ளன.
மேற்படி ஆவணங்கள் CIA மற்றும் FBI அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
அதில் 2023-ஆம் ஆண்டில் ஐந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் இரவு வானத்தில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் “கோளங்களைக்” கண்டதாகத் தெரியவந்துள்ளது.
மேற்கு அமெரிக்காவில் உள்ள “முக்கியமான தேசியப் பாதுகாப்புத் தளத்திற்கு” அருகில் இந்த அசாதாரணமான ஒளிகளைக் கண்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




