கருத்து & பகுப்பாய்வு

பௌத்த ராஜதானியகப் போகுதாம் திருகோணமலை

வடகிழக்கில் பௌத்த ஆதிக்கப் பரம்பலை ஏற்படுத்தும் தீவீர முயற்சியில் அரசாங்கத்தின் தூதுவர்களான பௌத்த பிக்குமாரும் அவர் தம் ஆதரவாளர்களும் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்பதற்கு திருகோணமலையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இன்னொரு சம்பவம்தான் புல்மோட்டை அரிசி மலை காணிப்பறிப்பும் மக்களின் போராட்டங்களும்.

தொல்பொருள் அடையாளங்கள் என்றும் பௌத்த தொன்மங்கள் உள்ள இடமென்றும் அனுராதபுரகால பௌத்த அடையாளங்கள் என்றும் கூறிக்கொண்டு பௌத்த பிக்குமார் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடங்களை பௌத்த மயமாக்கவும் சிங்கள பரம்பலை உண்டாக்கவும் மேற்கொண்டுவரும் முயற்சிகளால் ஏற்படுத்தப்படும் கெடுபிடிகள் மாற்று மதத்தவர்கள் தங்கள் அடையாளங்களை தொலைத்துக்கொண்டிருக்கும் அவல நிலையொன்று திருகோணமலையில் உருவாகிவருகிறது. என்பதற்கு அண்மையில் இடம் பெற்றுவரும் சம்பவங்கள் கட்டியம் கூறுகின்றன.

இந்த பௌத்த கெடுபிடிகளின் பன்னணியில் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினர் புலனாய்வு பிரிவினர் செயற்பட்டவருவது கவலைதரும் விடயமாகவும் சினம் கொள்ளவைக்கும் விவகாரங்களாகவும் காணப்படுகிறது. மிகதிட்டமிட்ட முறையில் தமிழ் மக்களுக்கு முஸ்லீம் குடிகளுக்கு சொந்தமான நிலங்கள,; காணிகள், வயல்கள் வாணிப இடங்கள், கோயில்கள் குளங்கள் என எல்லாம் கபளீகரம் செய்யப்படுகிறது. இதற்கு அரசபடைகள் பாதுகாப்பு வழங்குவதுடன் அரசவர்த்தமானி, தொல்பொருள் செயலணி என்ற மூலகங்கள் ஆதரவு வழங்கிவருவதை நேரடியாகவே காணக்கூடியதாகவுள்டளது..

கடந்த 22 ஆம் திகதி (22.9.2023) புல் மோட்டை முஸ்லீம் குடி மக்களை பதட்டத்துக்கு உள்ளாக்கிய ஒரு சம்பவம் மாவட்டம் முழுவதையுமே ஓடி முழிக்கவைத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை (22.9.2023) புல்மோட்டை முதலாம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட அரிசி மலைக்குடா என அழைக்கப’படும் பொன்மலைக் குடா பகுதிக்குள் புகுந்த பிக்கு ஒருவர் முஸ்லீம் குடி மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பூஜாபூமி என்ற பெயரில் கபளீகரம் செய்ய எடுத்த முயற்சியை கண்டித்து மக்கள் எதிர்ப்பு காட்டிய நிலையில் பதட்ட நிலையொன்று உருவாகியது மாத்திமல்ல குடி மக்களில் ஒருபெண் கனரக இயந்திரமான புல்டோசர் யந்திரத்தால் படுகாயம் அடைந்த ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளதுஃ

புல்மோட்டைப்பகுதியில் வசித்துவரும் பௌத்த தேரரான பனாமுரே திலகவங்சதேரர் என்பவர் தனது சகோதரர் சகிதம் புல்டோசர் இயந்திர மொன்றை கொண்டு வந்து முஸ்லீம் குடி மக்கள் ஆறுபேருக்கு சொந்தமான வயல் காணியை துப்பரவு செய்துள்ளார். இது களேபரமாக மாறும் ஆபத்தை உருவாக்க பார்த்துள்ளது.

இக்காணிகள் அயலில் உள்ள பௌத்த விகாரைக்கு உரித்துடையது என வர்த்தமானி அறிவத்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என தேரர் காரணத்தை கூறி மேற்படி வயல் காணியை துப்பரவ செய்துள்ளார். அவரின் இந்த அத்துமீறிய செயலுக்கு இராணுவமும் கடற்படையினரும் பாது காப்பு வழங்கியுள்ளனர். தேரரின் இச்செய்கையை கண்டித்து குடி மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். “பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் எமது நிலத்தை பூஜாபூமி என்னும் பெயரில் சுவீகரிக்க விடமாட்டோம்” என அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஆண்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.. கொண்டுவரப்பட்ட கனரக இயந்திரத்தின்மீது எறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபொது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக முறுகல் நிலையொன்று ஏற்பட்ட நிலையில் பெண் ஒருவர் காயத்துக்கள்ளாகி திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாகவே குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தனியார் சொந்தமான காணிகள், வயல்கள், மேச்சல் தரைகளை மற்றும் இந்து ஆலயங்கள் என்பன பூஜாபூமி என்ற பௌத்த சுவீகரிப்புக்கு ஏற்பவும் தொல் பொருள் சட்டத்துக்கு கீழும் கபளீகரம் செய்யும் நடைமறைகள் அண்மைக்காலமாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு நாடகமே அரிசி மலைக்காணி சுவீகரிப்பு.

புல்மோட்டை அரிசி மலைப்பிரதெசம் ஒரு அழகான மலை சூழ்ந்த பிரதேசம்.. இப்பிரதேசத்தை கையகப்படுத்தும் நோக்கில் 20014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் 500 எக்கர் நிலப்பரப்பை விகாரையொன்றை நிர்மாணிக்க அளவீடு செய்து அட்டகாசப்படுத்திய அதே பௌத்த தேரர்தான் கடந்த வெள்ளிக்கிழமை (22.9.2923) குடிமக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார்;. இவரின் இந்த அடாவடித்தனத்துக்கு அரசாங்கம் மறைமுகமாக ஆதரவு வழங்கிவருவதுடன் படையினரும் பக்கபலமாக இருக்கின்ற காரணத்தினால் எதிர்ப்புக்கு மத்தியிலும் அரிசி மலைப்பிரதேசத்தில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு மிக விரைவில் திறப்பு விழா நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கைங்கரியம் இப்பிரதேசத்தில் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணமே இருக்கிறது.

ஏலவே திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்கள் இத்தகைய கெடுபிடிகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறதென்பதற்கு பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம். உப்புவெளி பிரதேச சபையின் ஆளுகைக்குள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இருந்த கன்னியா வெந்நீரூற்று 2010 ஆம் ஆண்டு தொல் பொருள் திணைக்களத்தின் அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இராவணன் தன்தயாரின் ஈமத்துக்காக வடிவமைத்த ஊற்றுக்கள் இந்துக்களின்; பூர்வீகம் பேசிய கிணறுகள் இன்று கை நழுவிப்போய்விட்டது.

நிலாவெளி கோபாலபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள சுடுகாட்டை கடற்படை முகாம் விஸ்தரிப்புக்கு சுவீகரிக்கப்பட்டமை 2017 ஆம் ஆண்டு புல்மோட்டை பட்டிக்குடா மீள்குடியேற்ற கிராமத்துக்கள் புகுந்த வனபரிபாலன திணைக்களத்தினர் மக்கள் மேற்கொண்ட கட்டுமானப் பணிகளை இடை நிறுத்தியமை இதேயாண்டு (2017) தோப்பூர் செல்வநகர் கிராமத்துக்குள் புகுந்த பௌத்த தேரர்கள் 10க்கு மேற்பட்ட வீடுகளை சேதமாக்கியது. குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்துக்குள் புராதனமான விகாரையொன்று இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக ஆலயத்தின் பனரைமைப்பை தடுத்தமை அதேபோன்று மூதூர் சூடைக்குடா மத்தளமலை முருகன் ஆலயத்தின் சுற்றுப்பகுதி தொன்மையான பௌத்த அடையாளங்கள் கொண்டதென தொல்பொருள் திணைக்களம் ஆலயத்தின் புனரமைப்பு பணியை மேற்கொண்டவர்களை கைது செய்தமை கங்குவேலி அகஸ்தியர் ஆலய எல்லைக்குள் பௌத்த விகாரை யொன்றை அமைக்க முற்பட்டமை போன்ற மாவட்டம் தழுவிய பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் பௌத்த தேரர்கள்.

2020 ஆம் ஆண்டளவில் கிழக்கபேரணி யொன்றை அமைத்த முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயராஜபக்ஷ கிழக்கில் 2000 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களை பௌத்த தொன்;மங்களாக பிரகடப்படுத்திய சம்பவங்கள் கிழக்கின் இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் ஒரு சூட்சுமமாகவே கருத வேண்டும்.

பௌத்த விகாரைகள் நிர்மாணம் விஸ்தரிப்பு, தொல்லியல், தொன்மங்கள் பூஜாபூமி, என ஏகப்பட்ட நிகழ்ச்சி திட்டங்களின்கீழ் திருகோணமலை மாவட்டம் கபளீகரம் செய்யப்படுகிறது. கடந்த கட்டுரையொன்றில் நான் குறிப்பிட்டதுபோல் 1977 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் சேருவிலை என்ற தேர்தல் தொகுதி சிங்கள பெரும்பான்மைக்காக உருவாக்கப்பட்டதுபோல் தென்னமரவடி தொடக்கம் வெருகல்வரை நிலப்பரப்பால் துண்டாடப்பட்டு இன்னுமொரு பௌத்த மக்கள் செறிவு கொண்ட தேர்தல்தொகுதி ஒன்றை உருவாக்க அரசாங்கமும் சிங்கள புத்தி ஜீவிகளும் தந்திரோபாயமாக காய்களை நனாத்திக் கொண்டிருப்பதை தமிழ் மக்களோ அவர் தம் தலைமைகளோ இன்னும் தெரிந்து கொள்ளவில்லை.. அவ்வாறு ஒரு தொகுதி உருவாக்கப்படுமானால் ஏலவே நான்கு பிரதி நிதித்துவத்தில் மூன்றை இழந்து நிற்கும் தமிழர்கள் மாவட்டத்தின் மொத்த பிரிநிதித்துவத்தையுமே இழக்க வேண்டிய அவல நிலையொன்று விரைவில் ஏற்பட்டு விடும் என்பதற்கு ஐயமில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பார்க்கும் இட மெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது சிவலிங்கங்கள் அல்ல புத்தர் சிலைகள்.. பாரம் பரியமான இடங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. உதாரணமாக இலங்கை துறைமுகம் இலங்கா பட்டுவ என பெயர் சூட்டப்பட்டு விட்டது. கேந்திர மக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. தொல்பொருள் ஆதிகத்தின்கீழ் காணிகளும் ஆலய வளாகங்களும் சுவீகரிக்கப்படுகின்றன. பௌத்த பேராதிக்கத்தின் கீழ் பௌத்த ராஜதானியாக மாற்றும் கெடுபிடிகளிலிருந்து எங்கே தப்பவது என தமிழர்கள் தவிப்பதைத்தவிர மாற்று வழி காணப்பட வேண்டும்.

முதலில் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டபோதும் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை காரணமாக பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கே திட்டமஜடப்பட்டு வருவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படி அடுத்த வருடம் ஜூன் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றை கலைக்கவேண்டிய சூழ் நிலையும் அவசியமும் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருப்பதாகவும் எனவே பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்த ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படலாமென எதிர்வு கூறப்படுகிறது.

கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி
Trending
கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி
2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் (5.8.2023) நடைபெற்ற பொதுத் தேர்தலின் பதவிக்காலம் 2025 ஆவணியுடன் முடிவடைகிறபோதும் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் டிசம்பருக்குள் நடத்தியாகவேண்டும். எனவே அதற்குரிய ஏற்பாடுகள் அடுத்த வருடம் முற்பகுதியிலிருந்தே ஆரம்பிக்கவேண்டியது அவசியம்.

ஜனாதி பதி தேர்தலா பொதுத்தேர்தலா என்பதை தீர் மானிப்பதில் ஜனாதிபதிக்கு பல்வேறு சிக்கல்கள் காணப்படுகிற தென்பது வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படுகிற விடயம் ஏலவே மாகாண சபை தேர் தல் நடத்தப்படாமை வேட்பு மனு கோரப்பட்டிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் நடத்துவதற்கான இழுத்தடிப்புக்கள் ஜனாதிபதிமீது எதிர்க்கட்சிகள் வசைபாடுவதற்கு காரணங்களாக அமைந்து காணப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலையில் அனைத்து தேர்தலுக்குமுன் பொதுத்தேர்தலை முன்னுக்கு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறதென்ற செய்தி புதிய பிரச்சனைகளுக்கு வித்திடலாம். பொதுத்தேர்தல் நடத்துவதற்கான முடிவுக்கு வரவேண்டுமாயின் பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும். அந்த அதிகாரம் இருந்தாலும் கலைப்பை எதிர்க்க பல பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

காரணம் பதவிக்காலத்துக்கு முன் கலைப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். பலபேர் பாராளுமன்றுக்கு புதியவர்கள் மாத்திரமல்ல அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோமா இல்லையா என்று சந்தேகத்துடன் இருப்பவர்கள். இவர்கள் பதவிக்;காலத்துக்கு முன் போகவேண்டி வந்தால் பல சலுகைகளை இழக்கவேண்டிவரும். அதுவுமன்றி பாராளுமன்றத்துக்குள் இருக்கும் தேசியக்கட்சிகள் பிரதேச கட்சிகள் சிறு கட்சி உறுப்பினர்கள் அங்கமிங்குமாக கட்சி தாவி நிக்கிற நிலையில் பாராளுமன்றம் மறை முகமாக பலம் இழந்து காணப்படுவதுடன் ஜனாதிபதி பலமற்ற ஒரு பிரகிருதியாகவே பாராளமன்றத்தில காணப்படுகிறார்.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ரணிலவிக்கிரம சிங்க வெல்லும் சாத்தியம் இருப்பதாக சொல்ல முடியாது. நாட்டை இக்ககெட்டான நிலையிலிருந்து மீட்டவர் என்ற ஒரு காரணம் அல்;லது நீண்ட அனுபவம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியர் என்ற காரணங்கள் மட்டும் வெல்வதற்கான காரணிகளாக இருக்க முடியாது என்பது பழுத்த அரசியல் வாதியான ரணிலுக்கு தெரியாத ஒரு விடயமல்ல. போட்டியில் எதிரே நிற்கப்போகிறவர்கள் யார். ஆதரிக்கப்போகும் கட்சிகள் எவை என’பதில் தான் சாதக நஜலை வெளிப்படும்.

அடுத்த ஜனாதிhதி தேர்தலில் போட்டியிடுவதற்க பலர் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.. அவர்களின் பலம் வாக்குப்பலம் செல்வாக்கு என்பன இங்கு முக்கியம் பெறப்போகிறது. ஏலவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தொற்றுப்போனவர் ரணில். அதமட்டுமன்றி தனமீத நம்பிக்கையற்று வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுத்தவரும் கூட. வழமையாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் 10 மேற்பட்டவர்கள் போட்டியிட்ட அனுபவம் இலங்கைக்குண்டு. இருந்த போதிலும் போட்டி என்பது இரு முனையாக மும் முனையாக இருப்பதே வழக்கம்.

தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக போட்டியிட இருக்கும் போட்டியாளர்களை தற்போதைய தகவலின்படி பார்ப்பின் இவருக்கு நேர் ஒத்தவராக தற்போது காணப்படுகிறவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாஸ. இவர் கங்கணம் கட்டியபடியே காணப்படுகிறார். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் உடன்பாடு காணப’படும் என்ற சமிஞ்சை இதுவரை தென் படவில்லை. மறு புறத்தே மக்கள் மத்தியில் புதிய கனவுகளை விதைத்துக்கொண்டிருக்கம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரா குமார திஸநாயக்க. இவர் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறார். இன்னொரு ஓரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியின் தலைவருமாகிய மைத்தரிபால சிறி சேன சூளுரைத்து வருகிறார்.

கோத்தபாயாவின் நெருங்கிய நண்பரும் பிரபல தொழிலதிபரும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவருமாகிய திலித் ஜெயவீர மற்றும் பொஜன பெரமுன சார்பில் பஷில் ராஜபக்ஷவோ அன்றி சமல் ராஜபக்ஷவோ அதிசயமாக நாமல் ராஜபக்ஷவோ களமிறக்கப்படலாம் . இந்த குதிரைகளை தோற்கடிக்கும் சூழ் நிலை உருவாகினால் மட்டுமே ரணில் விக்கிரம சிங்க தேர் தலில் வெற்றி பெற்று மீண்டும் அந்த கதிரையில் அமர முடியும். துரதிஷ்டவசமாக அச்சூழ்நிலை காணப்படாத காரணத்தினாலையே தனது நிகழ்சி நிரலை மாற்றி பொதுத் தேர்தலை நடத்தப்பார்க்கிறார் ஜனாதிபதி என்று காரணத்தை கற்பித்முக்கொள்ளலாம். இதற்கு நடுலில் முன்னாள் ஜனாதிபதி கோத்தா மீண்டும் குதிக்கப்போகிறார் என்ற கதைகளும் தாறு மாறாக அடி பட்டுக்கொண்டிருக்கிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 லட்சம் வாக்கக்களைப்பெற்று நான் சிங்கள பெரும்பான்மையால் மட்டுமே தெரிவு செய்யப்பட்ட தலைவன் என்று கூறிக்கொண்டு துட்டகைமுனு பாணியில் நடக்க முற்பட்டவரை அந்த மக்களே ஓட்டிக்டகலைத்தார்கள். இவ்வாறான அசாத்திய நிலைகளை புரிந்து கொண்டதனால்தான் ஜனாதிபதி தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு பொதுத்தேர்தலை நடத்த விரும்பகிறார் என்று வைத்துக்கொண்டாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் சீர் நிலை தற்போது போதுமானதாக இருக்கிறதா என்று பரி சோதிக்கவேண்டியிருக்கிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல் கடந்த பொதுத்தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட சுதாகரிக்க முடியாத கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி ஆகிவிட்டது என்பது நகைப்புக்குரிய விடயந்தான்.

சாணக்கியரான ரணில் பொதுத்தேர் தலை நடத்த தீர் மானிதிதிருப்பதற்கான காரணம் ஜனாதி பதி தேர் தலில் உள்ள சவால்களை வெற்றி கொள்வதை விட பொதுத் தேர்தலை தனக்கு சாதகமாக்கி தன் நாட்டமுடைய ஒரு பலமான பாராளுமன்றை உருவாக்கி அதன்பின் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது புத்திசாலித்தனமான வேலையாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். எவ்வாறு இருப்பினும் இது ஒரு அக்னி பரீட்ஷையாகவே இருக்கும் என்பது அவர் அறியாத ஒரு விடயமல்ல. பொதுத்தேர் தலை நடத்துவதிலும் பல சிக்கல்கள் இருக்கிறது மாறாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதிலும் பல சவால்கள் இரக்கிறதென்பது வெளிப்படையாக தெரிந்தாலும் இன்றைய சூழ் நிலையை வைத்துக்கொண்டு எதையுமே தீர்மானிக்க முடியாது என்பதேயுண்மை.

நன்றி – அக்னியன்

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content