இலங்கை செய்தி

திறைசேரி நிதி மோசடி: FBI உதவியை நாடியது இலங்கை?

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலங்கை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை புலனாய்வாளர்கள், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் FBI உதவியை நாடியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல் ஊடுருவல் தாக்குதல்களைக் கண்டறிந்து தணிப்பதில் நிபுணத்துவம் பெற்ற, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இணையப் பாதுகாப்பு நிறுவனத்தையும் இலங்கை விசாரணைப் பிரிவு தொடர்பு கொண்டுள்ளது.

மோசடி மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தன, திறைசேரியிலிருந்து மோசடியாகத் திசை திருப்பப்பட்ட நிதி எங்கே உள்ளது, இந்த மோசடிக்குப் பின்னால் யார் இருந்தனர் என்பதை நாங்கள் இன்னும் அறியவில்லை.

மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் இந்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

இந்த விசாரணை ஒரு அனைத்துலக விசாரணையாக மாறியுள்ளது. ஆஸ்ரேலிய அதிகாரிகளும் இலங்கை அதிகாரிகளுக்கு உதவி வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

ஜனவரி மாதத்திலேயே இந்த ஊடுருவல் குறித்து தங்களுக்குத் தெரிந்திருந்ததாக நிதி அமைச்சு ஒப்புக்கொண்ட போதிலும், மார்ச் 28 ஆம் திகதியே நிதி அமைச்சகத்தின் பணிப்பாளர் நாயகத்தினால், குற்றப் புலனாய்வுப் பிரிவில், முதல் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னரே விசாரணைகள் தொடங்கியுள்ளன என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை