வட அமெரிக்கா

பாடசாலைக்கு வெளியே கனேடிய சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்!

ஒன்ராறியோ பர்லிங்டனில் பாடசாலைக்கு வெளியே சிறுமி ஒருவர் வாகனம் மோதி பலியான நிலையில், குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை மதியத்திற்கு மேல், சுமார் 5.30 மணியளவில் 8 வயதான Jayne Hounslow என்ற மாணவி வாகனம் மோதி குற்றுயிராக மீட்கப்பட்டார்.பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெற்றோரின் காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போது, அவர் மீது வாகனம் மோதியுள்ளது.

பாடசாலைக்கு வெளியே கனேடிய சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்: முதல் புகைப்படம் வெளியானது | Girl Killed Outside Burlington Identified

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தாலும், உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. இதனிடையே வாகனத்தால் மோதிய 21 வயது சாரதி சம்பவயிடத்தில் இருந்து அப்போது தப்பியிருந்தாலும், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சிறுமி Jayne Hounslow மரணம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. அவர் சார்ந்த சமூகத்தையும் இந்த மரணம் பாதித்துள்ளதாகவே கூறுகின்றனர்.இதனிடையே, சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content