ஆஸ்திரேலியா உலகம் செய்தி

வர்த்தகப் போர்: ட்ரம்புடன் பேச்சு நடத்த தயாராகிறது ஆஸ்திரேலியா

அடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 60 நாடுகள் மீது 12.5 சதவீதம் வரை புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அடிமைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 60 நாடுகள் மீது 12.5 சதவீதம் வரை புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ், இந்த வரி விதிப்பு முற்றிலும் நியாயமற்றது என்றும், இது குறித்து அமெரிக்க அதிபரிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,

இந்த வரிகளால் அமெரிக்க நுகர்வோருக்கே செலவுகள் அதிகரிக்கும் என்றும், இரு நாடுகளின் வர்த்தக உறவு பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையே தொடரும் போரால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு வழங்கிய எரிபொருள் கலால் வரிக்குறைப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

நாட்டில் போதுமான எண்ணெய் இருப்பு இருப்பதாலும், பயன்பாடு குறைந்து வருவதாலும் இந்த வரிக்குறைப்பு மீண்டும் நீட்டிக்கப்படாது என அல்பானீஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், வரி விதிப்பு மற்றும் போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும் அதிபர் டிரம்புடனான தனது உறவு தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி