ஆசியா

சீனாவில் அச்சுறுத்தும் பனிப்புயல் – கடும் நெருக்கடியில் மக்கள்

சீனாவில் சில பகுதிகளில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது.

வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தாக்கிய புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனையடுத்து அங்குள்ள பள்ளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு சின்ஜியாங் பகுதியில் அதிகப்படியான பனி மற்றும் காற்று வீசி வருவதால் பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டன.

பெய்ஜிங்கின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் 5 முதல் 15 செ.மீ வரையும், சில இடங்களில் 20 செ.மீ வரை பனி இருக்கக்கூடும். மேலும், டிச.14 வரை பனிப்புயல் தொடரும் என வானிலை ஆய்வு மைய நிர்வாகம் கணித்துள்ளது.

கடும் பனிப்புயல் காரணமாக மாகாணம் முழுவதும் மொத்தம் 100 நெடுஞ்சாலைகள், பிற சாலைகளும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்