இலங்கை செய்தி

தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடையில்லை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போது, 2011ஆம் ஆண்டு புலிகளின் சின்னங்களை பயன்படுத்த தடை விதித்தே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதில் இறந்தோரை நினைவேந்தல் நடத்த தடை விதிக்கப்படவில்லை.

கடந்த 13 வருடங்களாக நினைவேந்தல் நிகழ்வுகளை மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். அது தொடர்பில் ஜனாதிபதியோ, பாதுகாப்பு அமைச்சோ, நாடாளுமன்றமோ எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவ்வாறிருக்க பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோருவது ஏற்புடையதல்ல என்ற மன்று, நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை