இலங்கை

இலங்கையில் புளிக்கு கடுமையான தட்டுப்பாடு – ஒரு கிலோ புளி 2000 ரூபாய்

இலங்கை சந்தையில் புளிக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்க வேண்டியுள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் ஒரு கிலோ புளி, நேற்று 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்