ஐரோப்பா

பிரான்ஸில் தேசிய அளவில் வெடிக்கவுள்ள போராட்டம் – மஞ்சள் சீருடை இயக்கம் அழைப்பு

பிரான்சில் பல வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வாழ்கை செலவு அதிகரிப்பு குறித்த மற்றொரு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் இடம்பெறும் இந்த போராட்டம்  அக்டோபர் 17 அன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு போராட்டங்களும் ஒன்றாக இடம்பெறுவதால் இதனை சமாளிப்பது காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் போராடிய ‘மஞ்சள் சீருடை’ (Yellow Vest) இயக்கம், அக்டோபர் 17 அன்று ‘மஞ்சள் மற்றும் இளைஞர்’ போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

சமூக ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்ட இந்த அழைப்பில், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்