ஐரோப்பா செய்தி

பாரிசில் திடீரென பழுதடைந்த தொடருந்து!! குளிரில் சிக்கித் தவித்த பயணிகள்

பாரிஸ் Bercy நிலையத்தில் இருந்து Clermont நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று பழுதடைந்து தடைப்பட்டது.

இதனால் மின்சாரம் இன்றியும், வெப்பமூட்டி இன்றியும் ஐந்து மணிநேரங்களுக்கு மேலாக பயணிகள் குளிரில் தவித்துள்ளனர்.

Intercités ஒன்று நேற்று மாலை 6.57 மணிக்கு கிட்டத்தட்ட ஆயிரம் பயணிகளுடன் பாரிசில் இருந்து புறப்பட்டது.

இரவு 10.30 மணிக்கு Clermont-Ferrand நகரைச் சென்றடைந்திருக்கவேண்டிய தொடருந்து Nevers (Nièvre) நகரில் இரவு 9.33 மணி அளவில் திடீரென பழுதடைந்து நின்றது.

தொடருந்தின் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியது. அத்துடன் வெப்பமூட்டியும் செயற்படவில்லை. இதனால் கடும் குளிருக்குள் பயணிகள் சிக்கினர்.

முதலில் இரண்டுமணிநேரங்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சேவைத்தடை இன்று அதிகாலை 3.30 மணிக்கும் மேலாக நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content