வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது. துப்பாக்கித் தோட்டா வலது காதின் மேல் பகுதியைத் துளைத்துச் சென்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏதோ ஒன்று நடக்கிறது; அது சரியில்லை என்பதைத் தாம் உணர்ந்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். காதின் தோல் பகுதியைத் தோட்டா துளைத்து வெளியேறுவதை உணர முடிந்ததாக அவர் கூறினார்.

எனினும் ட்ரம்ப்புக்கு மோசமான காயம் இல்லை. பிரசார இடத்துக்கு வெளியில் இருந்து மேடையை நோக்கிப் பலமுறை சுடப்பட்டதாக அமெரிக்க ரகசியச் சேவைத் துறை கூறியது.

இது ட்ரம்ப்பைப் படுகொலை செய்ய வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று கருதப்படுகிறது.

சம்பவத்தில் பார்வையாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 பார்வையாளர்கள் கடுமையாகக் காயமுற்றனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எனினும் அது பற்றிய மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்