பாரிய கொள்ளை சம்பவத்தில் இருந்து மீண்டு வரும் லூவர் அருங்காட்சியகம்
பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகம் பாதுகாப்பு குறைப்பாடுகளை படிப்படியாக சரிசெய்து வருகிறது. ஆனால் அதன் நற்பெயர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அதன் பழுதடைந்த உள்கட்டமைப்பு பெருகிவரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகங்களில் ஒன்றான, இந்த அருங்காட்சியகம் பாரிய கொள்ளை சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு பிரச்சினைகளை வெளிச்சம்போட்டு காட்டியது. பழைய அல்லது இல்லாத சிசிடிவி கேமராக்கள், உபகரணங்களின் தொடர்ச்சியான பற்றாக்குறை, நவீன பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒரு பாதுகாப்பு இயக்குநர் இல்லாதது என தொடர்ச்சியான தோல்விகளை […]




