இலங்கை

பேருந்தை மறித்து குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்த பயணி தொடர்பில் போலீசார் வெளியிட்ட தகவல்

கம்பளை இலங்கை போக்குவரத்துச்  சபை  பஸ் டிப்போவில் கடமையாற்றும் பஸ் சாரதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை சிலரால் தாக்கப்பட்டுக்  கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பி கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு  இரவு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் கடத்தப்பட்டவர் நேற்று இரவு கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழங்கால வாள் ஒன்று குறித்து விசாரிப்பதற்காக குறித்த குழுவினர் தன்னை கொழும்புக்கு கடத்திச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மாவெலயில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை துரத்திச் சென்ற வேன் ஒன்று அதனை மறைத்து, நான்கு பேர் பேருந்தில் ஏறி பயணி ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளனர்.

இறுதியில், கத்திக்குத்துத் தாக்குதலால் காயமடைந்த பயணியை குறித்த குழுவினர் வேனில் கடத்திச் சென்றனர்.

கம்பளை டிப்போவின் சாரதியான 46 வயதான ஹேமந்த ராஜபக்ச என்பவரே கடத்தப்பட்டிருந்தார்.

பணிக்கு செல்லும் போது நேற்றைய தினம் இந்தச் சம்பவத்தை அவர் எதிர்கொண்டிருந்தார்.

தன்னை கொழும்பு ஒருகொடவத்தை பகுதிக்கு வேனில் ஏற்றிச் சென்றதாகவும் அங்கு தன்னிடம் இருந்த வாள் பற்றிக் கேட்டதாகவும் அந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கடத்த வந்தவர்களில் ஒரு பெண்ணும் இருந்ததை பொலிஸார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

 

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content