வட அமெரிக்கா

அமெரிக்காவில் காதலியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்திருந்த காதலன்!

தனது காதலியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்திருந்த காதலன் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வசித்து வருபவர் ஹெத்தேர் ஸ்சவாபி. 35 வயதான இவருக்கு சாட் ஸ்டிவன்ஸ் (42) என்ற ஆண் நண்பர் இருந்துள்ளார். இவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.இவருக்கும் ஹெத்தேருக்கும் இடையே போதைப்பொருள் விவகாரத்தில் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக இருந்து வந்தனர். இது குறித்து ஹெத்தேரின் தாய்க்கு தெரியவர, அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒரு வருடம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென ஹெத்தேரை காணவில்லை, இதனால் அவரது தாய் பொலிஸில் புகாரளித்துள்ளார். பொலிஸார் கடந்த 5 மாதமாக தேடி வந்தனர். பின்னர், விசாரணையில் அவர் தனது ஆண் நண்பரின் வீடு உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தின் மெக் கென்னடி நகருக்கு குடிபெயர்ந்தது தெரியவந்தது.

ஹெத்தேர் ஸ்சவாபி,  சாட் ஸ்டிவன்ஸ்

இதையடுத்து காதலரிடம் விசாரித்தபோது, காதலி தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். பிறகு அவரது வீட்டை சோதனை செய்தபோது, கதவுக்கு பின்பக்கம் அறையொன்று மறைமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்குள் பிரிட்ஜை வைத்து காதலியின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து உடனடியாக பொலிஸார் அவரை கைது செய்தனர்.

இருவருக்கும் என்ன பிரச்சினை? ஏன் அவரை கொலை செய்தார்? எதற்காக இத்தனை நாட்களாக உடலை பாதுகாத்து வைத்திருந்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content