பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையாக உயர்வு!
பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு ‘கணிசமான’ நிலையிலிருந்து ‘கடுமையான’ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, அடுத்த ஆறு மாதங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கருதப்படுகிறது.
வடக்கு லண்டனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் கோல்டர்ஸ் கிரீன் தாக்குதலின் விளைவாக மட்டும் இந்த அச்சுறுத்தலின் அளவு அதிகரிக்கப்படவில்லை என்றும், மாறாக பரந்த இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி” அச்சுறுத்தல்களின் காரணமாகவும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை செயலாளர் ஷபான மஹ்மூத், அச்சுறுத்தலின் அளவு உயர்த்தப்பட்டிருப்பது பலருக்கும், குறிப்பாக மிகுந்த துன்பங்களை அனுபவித்த யூத சமூகத்தினருக்கு கவலையளிக்கும்” என்று கூறியுள்ளார்.
கடைசியாக பிப்ரவரி 2022-ல் இந்த அச்சுறுத்தலின் அளவு ‘கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது.




