வெனிசுலாவில் எண்ணெய் உள்கட்டமைப்புகளுக்கு சேதமா?
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அந்நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்புகளுக்கு உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மிகக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரங்கள் எவற்றிலும் முக்கியமான எண்ணெய் நிறுவன உள்கட்டமைப்புகள் எதுவும் அமையப் பெறவில்லை என தெரியவருகின்றது. குறிப்பாக, வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய் மையமான மராகைபோ ஏரிக்கு (Lake Maracaibo) அருகிலுள்ள மராகைபோ நகர அதிகாரிகள், தங்கள் பகுதியில் யாருக்கும் காயங்களோ பாதிப்புகளோ ஏற்பட்டதாக அறிக்கை எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். உலகிலேயே […]




