ஆஸ்திரேலியா செய்தி

மே மாதம்வரை எரிபொருள் இருப்பை உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா!

  • April 6, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவும் நிலையில், ஆஸ்திரேலியா தனது எரிபொருள் இருப்பை எதிர்வரும் மே மாதம்வரை உறுதிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் Chris Bowen மேற்படி தகவலை இன்று (06) வெளியிட்டுள்ளார். மே மாதம் இறுதி வரை தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான சட்டபூர்வ ஒப்பந்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவும் இக்கட்டான காலக்கட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி விநியோகத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பாதுகாப்பதில் ஆஸ்திரேலிய அரசு தீவிர கவனம் […]

இலங்கை செய்தி

QR முறை விரைவில் நீக்கம்: புதன் விடுமுறையும் மாறும்!

  • April 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கு இம்மாதம் 9 எரிபொருள் கப்பல்கள் வரவுள்ளன என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுவருகின்றது. குறிப்பாக பற்றாக்குறையின் உச்சக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விரைவில் படிப்படியாக நீக்கப்படலாம்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். எரிபொருள் தேவையைக் குறைப்பதற்காக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த புதன்கிழமை, விரைவில் ஒரு […]

இந்தியா

காதல் திருமணம் செய்த மகளை கொலை செய்த தந்தை: ஆந்திராவில் கொடூரம்!

  • April 6, 2026
  • 0 Comments

குடும்ப எதிர்ப்பைமீறி காதல் திருணம் செய்துகொண்ட யுவதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது. ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த சவ்டேஸ்வரி (வயது 22) குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4 ஆம் திகதி காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மகள் சவ்டேஸ்வரியை காணவில்லை என அவரது தந்தை, மச்சேர்லா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் கடந்த மாதம் 15 ஆம் திகதி சவ்டேஸ்வரியை கண்டுபிடித்தனர். காவல் நிலையத்தின் […]

உலகம் செய்தி

ஈரானிலுள்ள கல்வி நிறுவனங்கள் இலக்கு வைப்பு!

  • April 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலின் விளைவாக நகரின் சில பகுதிகளில் எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், தலைநகரில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் உள்ள பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாக இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவங்கள் ஈரான் தலைநகரில் பெரும் […]

உலகம் செய்தி

எரிசக்தி நெருக்கடி: மத்திய கிழக்குக்கு சிறப்பு தூதுவர்களை அனுப்பும் தென்கொரியா!

  • April 6, 2026
  • 0 Comments

எரிசக்தி தேவைகளுக்காக வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா, தமக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதுவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபியா, ஓமான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுடன் எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். உள்நாட்டுத் எரிபொருள் தேவையில் சுமார் 70 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து பெறுவதால், விநியோகத் தடையைத் தவிர்க்க தென்கொரியா ராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. ஆசியாவின் முக்கிய பொருளாதார சக்தியாகத் […]

உலகம் செய்தி

உடனடி போர் நிறுத்தம்: ரஷ்யா, சீனா கூட்டாக வலியுறுத்து!

  • April 6, 2026
  • 0 Comments

மேற்காசிய போர்ச்சூழல் சூழல் மற்றும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சீனா மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான இவ்விரு நாடுகளும், இந்தப் பிரச்சனையில் நேர்மையான மற்றும் சமநிலையான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. ஹார்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்யவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் உடனடி போர்நிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். […]

செய்தி விளையாட்டு

ஈரானின் கோரிக்கையை ஏற்குமா FIFA?

  • April 6, 2026
  • 0 Comments

2026 கால்பந்து உலகக்கிண்ண தொடரில் ஈரான் அணி பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்காவில் தமது அணி பங்கேற்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிக்கோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. பாதுகாப்பு காரணங்களை முன்வைத்தே இதற்குரிய கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை FIFA ஏற்றால் மட்டுமே தமது அணி உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருப்பதாகக் கருதும் ஈரான், வீரர்களின் பாதுகாப்பு குறித்த உறுதியான […]

விளையாட்டு

தொடர் தோல்விகளால் திண்டாடும் CSK!

  • April 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியிலும் சென்னை அணி மண்கவ்வியுள்ளது. தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால் அவ்வணி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றது. சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அணியை விளாசித்தள்ளி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் Royal Challengers Bangalore (RCB) மற்றும் chennai super kings (CSK) அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிஎஸ்கே தலைவர் Ruturaj Gaikwad பந்துவீச்சை தேர்வு செய்தார். இதற்கமைய துடுப்பெடுத்தாடிய RCB. அணி, […]

இலங்கை செய்தி

இலங்கையில் எகிறும் வாழ்க்கைச் செலவு!

  • April 6, 2026
  • 0 Comments

இலங்கையில் நேற்று (06) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய லிற்றோ LITRO மற்றும் லாப்ஸ் LAUGFS கேஸ் நிறுவனங்கள் புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளன. இதற்கமைய 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,765 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,5 கிலோ லிற்றோ எரிவாயு விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1910 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 2.3 […]

உலகம் செய்தி

தொடரும் போர்: உயிரிழப்புகள் அதிகரிப்பு!

  • April 3, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் இன்று 35 ஆவது நாளாக தொடர்கின்றது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான்மீது போர் தொடுத்தன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. இப்போரால் எரிபொருள் நெருக்கடி மட்டுமல்ல உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், அமெரிக்க தாக்குதல்களில் ஈரானில் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. ஈரான் மற்றும் லெபனானிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. லேபனானில் மாத்திரம் 1,345 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் […]