சிறைச்சாலை மோதல்: அறிக்கை கோருகிறது நீதி அமைச்சு
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை இன்றைய தினமே தனக்கு வழங்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். 38 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நீர்கொழும்பு வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்த இருவர் கொழும்பு […]













