ஈரான்மீது 10,800 குண்டுவீச்சுத் தாக்குதல்கள்!
ஈரான்மீது 10,800 குண்டுவீச்சுத் தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளன.
இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஏப்ரல் 7 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள்ளேயே மேற்படி தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, லெபனானில் 14,900-க்கும் மேற்பட்ட பீரங்கித் தாக்குதல்களையும், 2,500 வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரான் மற்றும் லெபனானில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.




