பௌத்த துறவியின் ஆடை விவகாரம் குறித்து சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
ஒரு துறவி சிறையில் அடைக்கப்படும்போது, அவரது ஆடையைக் களைவது தொடர்பாகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையைத் தெரிவிக்கும் ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பை, சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார, நீதி அமைச்சரின் ஒப்புதலுக்கு உட்பட்டு வெளியிட்டுள்ளார். அதன்படி, சிறைச்சாலைத் திணைக்களத்தின் பல வழக்கமான உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளன. ஒரு பௌத்தத் துறவி கைதியாகச் சிறையில் அடைக்கப்படும்போது, அதுவரை அவர் அணிந்திருந்த ஆடையைக் களைவது குறித்து, சம்பந்தப்பட்ட பிரிவு அல்லது தரப்பினருக்கு […]





