UAEவின் ராஸ் அல் கைமாவில் கோர விபத்து – 11 பேர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு பிரிவுகளில் ஒரு பிரிவான ராஸ் அல் கைமாவில் Ras Al Khaimah பயணிகள் பேருந்து ஒன்றும், லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது சம்பவ இடத்தில் அவசர சேவைகள் மற்றும் குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் அடையாளத்தையோ அல்லது வேறு யாரேனும் காயமடைந்தனரா என்ற தகவலோ வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



