அரசியல் இலங்கை செய்தி

“தென்னிலங்கையில் தமிழர் விரோத அரசு” – அமைச்சர் கூறுவது என்ன?

  • April 22, 2026
  • 0 Comments

” தெற்கில் தமிழர் விரோத “அசுர அரசொன்று” இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செயல்படமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது.  தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கை மக்களுக்கான கட்சியாகும்.” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் இன்று (22.04.2026) ஆரம்பிக்கப்பட்டது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் […]

இலங்கை செய்தி

இரத்தினபுரியில் கறுப்பு ஆடை கும்பல் வெறியாட்டம்: சட்ட நடவடிக்கைக்கு வலியுறுத்து!

  • April 22, 2026
  • 0 Comments

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருடனும் பிரதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். அதேவேளை, காவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதானியை தொடர்புகொண்ட பிரதி அமைச்சர் பிரதீப் , எதற்காக தோட்டப்பகுதியில் இவ்வாறான கட்டமைப்பு (கறுப்பு கும்பல்) உருவாக்கப்பட்டது, இதன் பின்புலம் என்னவென்பது […]

உலகம் செய்தி

ஈரானில் தாக்குதலுக்கு இலக்கான 1,300 பாடசாலைகளில் 50 வீதமானவை சீரமைப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களினால் ஈரானில் சேதமடைந்த 1,300 பாடசாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் அலிரேசா கசெமி Alireza Kazemi தெரிவித்தார். கடுமையாக சேதமடைந்த பாடசாலைகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். போர்ச் சூழலால் தொலைக்காட்சி மற்றும் இணையவழி ஊடாக ஈரான் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

ஈரானில் 54 ஆவது நாளாக தொடரும் இணைய முடக்கம்!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானில் இணையத்தள முடக்கம் இன்று 54 ஆவது நாளாக தொடர்கின்றது. இது அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டில் வெடித்த போராட்டங்களால் ஆரம்பத்தில் இணையத்தள கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் போர்ச் சூழலால் அது மேலும் தீவிரமடைந்துள்ளது. சுமார் 1272 மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தடையால் பல வணிக நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் முடங்கியுள்ளன. ஷஇணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஈரானியர்கள் உலகத்தொடர்பு இன்றி பெரும் […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநரை சந்தித்தார் பலாலி விமானப்படை தளபதி!

  • April 22, 2026
  • 0 Comments

பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் டி.எஸ்.எஸ்.சுரங்க செனவிரத்ன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்று இன்று (22.04.2026) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இருவருக்குமிடையே மிகவும் சுமுகமான முறையில் அமைந்திருந்த இந்தச் சந்திப்பில், சமகால நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தியா தமிழ்நாடு

தமிழகத்தை ஆளப்போவது யார்? நாளை தேர்தல்!

  • April 22, 2026
  • 0 Comments

ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் தேர்தல், தமிழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சார நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்து, தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளது. தமிழகத்தில் இம்முறை நான்கு முனை போட்டி நிலவுகின்றது.

இந்தியா செய்தி

‘கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நாள் இன்று’: மோடி விடுத்துள்ள அறிவிப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

தீவிரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்து இன்றோடு ஓராண்டு ஆகியுள்ளது. தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் டிஆர்எஃப் பிரிவு இந்த தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மஹாதேவ் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தது. மேலும், பாகிஸ்தான் உடனான சிந்து […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • April 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டுக்கு (Mossad) இரகசியத் தகவல்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஈரானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் சிவில் பாதுகாப்புத் துறையில் உயர் பதவியில் இருந்த மெஹ்தி பரித் (Mehdi Farid) என்பவர், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தூக்கிலிடப்பட்டார். பாதுகாப்பு வசதிகளின் வரைபடங்கள், உள் கட்டமைப்பு விவரங்கள் மற்றும் பணியாளர் கோப்புகளை இஸ்ரேலுக்கு மாற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஈரான் நாட்டின் நீதித்துறை ஊடகமான மிசான் (Mizan), […]

உலகம் செய்தி

அமைதி பேச்சில் பங்கேற்க ஈரான் மறுப்பு!

  • April 22, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா காட்டிய அலட்சியப் போக்கும், டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களும் இந்தத் தயக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்தக்கட்ட அமைதி பேச்சுக்கு இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. இதற்குரிய இராஜதந்திர முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகின்றது. இந்நிலையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சின் […]

செய்தி

லக்னோ, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • April 22, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் Lucknow Super Giants , ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள Ekana கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. முதல் 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த […]