யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்மீது அடக்குமுறை: சுமந்திரன் கடும் கண்டனம்

  • August 26, 2026
  • 0 Comments

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நேற்று யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பொலிஸார், மாவட்ட […]

திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி- மீட்புப் பணி தீவிரம்

  • August 26, 2026
  • 0 Comments

திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கப் புதன்கிழமை ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லையின் மறுபக்கத்தில், சீனா – நேபாள இடையிலான நில எல்லையைக் சேற்றுச் சரிவு தாக்கியதில் திபெத்தின் கியிராங் (Gyirong) பகுதியில் “பெரும் உயிரிழப்புகளும்” பலர் காணாமல் போயுள்ளதாகவும் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் […]

ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

நாய்க்கு ராக்கி கயிறு: சர்ச்சையில் சிக்கிய நடிகை

  • August 26, 2026
  • 0 Comments

ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனோன் (Kriti Sanon) நடித்துள்ள இந்த விளம்பரத்தில், சகோதரர்களின் மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டும் இந்து பண்டிகைக் கொண்டாட்டம் சித்திரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் கிருதி சனோன் அரைகுறை ஆடையுடன் (Cropped top and skirt) நடித்திருப்பதாகக் கூறி, […]

Rice இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஈரானுக்கான இந்திய அரிசி ஏற்றுமதி

  • August 26, 2026
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியா, அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் எழுந்தபோதிலும் ஈரானுக்கான தனது அரிசி ஏற்றுமதி பாதிக்கப்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரான் – இந்தியா இடையிலான 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த வர்த்தகத்தில் அரிசி ஏற்றுமதி மட்டுமே சுமார் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் மொத்த சர்வதேச அரிசி ஏற்றுமதியில் (11.5 பில்லியன் டாலர்) ஈரான் 7 […]

அபுதாபியின் 'மினா சயீத்' (Mina Zayed) துறைமுகத்தில் MV Sea Star 2 என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் கடந்த 11 மாதங்களாகச் சிக்கித் தவித்த 7 இந்திய மாலுமிகள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மாலுமிகளையும் விரைவாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா செய்தி

அபுதாபியில் தவித்த 7 இந்திய மாலுமிகள் மீட்பு: ஏனையோரை மீட்க நடவடிக்கை

  • August 26, 2026
  • 0 Comments

அபுதாபியின் ‘மினா சயீத்’ (Mina Zayed) துறைமுகத்தில் MV Sea Star 2 என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் கடந்த 11 மாதங்களாகச் சிக்கித் தவித்த 7 இந்திய மாலுமிகள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மாலுமிகளையும் விரைவாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியத் தூதரகம், “சீ ஸ்டார் 2 கப்பலில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளின் நலன் மற்றும் அவர்களை விரைவில் தாயகம் அனுப்புவது தொடர்பாக உள்ளூர் […]

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும். இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து, மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“22” ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் தோற்கடிப்பார்கள்: கூட்டு எதிரணி

  • August 26, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும். இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து, மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் மக்கள் நிச்சயம் அதனைத் தோற்கடிப்பார்கள். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் திட்டமிடவில்லை. ஏனெனில், தேர்தலை நடத்தினால் நிச்சயம் தோல்வியடைவோம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக, […]

சிரிய இராணுவத்துடன் இணைவு: குர்திஷ் தலைமையிலான SDF படை கலைப்பு உலகம் செய்தி மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

சிரிய இராணுவத்துடன் இணைவு: குர்திஷ் தலைமையிலான SDF படை கலைப்பு

  • August 26, 2026
  • 0 Comments

சிரியாவின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான அரசாங்கத்துடன் எட்டப்பட்ட ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குர்திஷ் தலைமையிலான ‘சிரிய ஜனநாயகப் படைகள்’ (SDF) கலைக்கப்படுவதாக அதன் தலைவர் மஸ்லூம் அப்தி (Mazloum Abdi) அறிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ்ஐஎல் (ISIS) பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான போரில் முன்னின்று செயல்பட்ட SDF அமைப்பு, சிரிய இராணுவத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டு விட்டதாக டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதிமாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்தி உறுதிப்படுத்தினார். சிரியாவின் வடகிழக்கு […]

At least 15 newborns killed in Pakistan hospital fire உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் வைத்தியசாலையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி

  • August 26, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 15 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த போது பிம்ஸ் (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் (nursery) 16 குழந்தைகள் இருந்ததாக மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள் காட்டி Geo News புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் இருந்த ஏர் Air […]

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். இலங்கை செய்தி

ஏழை மக்களின் நிதியை கொள்ளையடித்த பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

  • August 26, 2026
  • 0 Comments

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாக செயற்பட்ட ஹட்டன்-டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணொருவரும், ஹட்டன்-டிக்கோயா காபெக்ஸ் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் […]

'செஸ்' உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தியா செய்தி விளையாட்டு

உலக சாம்பியனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்

  • August 26, 2026
  • 0 Comments

‘செஸ்’ உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். Chess.com இணையதளம் நடத்திய Titled Tuesday தொடரின் இரண்டாவது சுற்றில் இப்போட்டி நடைபெற்றது. வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய வந்தன் (தரவரிசை: 2,288), உலகின் முன்னணி வீரரான கார்ல்சனை (தரவரிசை: 2,823) எதிர்கொண்டார். இப்போட்டி குறித்துப் பேசிய வந்தன், “இழப்பதற்கு எதுவுமில்லை, […]