ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்வதற்கும் தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கடமை நேரத்தில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

  • August 27, 2026
  • 0 Comments

ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்வதற்கும் தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சில ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக ஊடகங்கள் மூலம் முக்கிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடும் நிலை அவதானிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கைக்கு அமைய ரயில்வே கட்டுப்பாட்டு அறைகள், எஞ்சின் கட்டுப்பாட்டு அறைகள், வேலைத்தளம் அல்லது எந்தவொரு வளாகத்திலுமிருந்து எந்த அதிகாரியும் அல்லது ஊழியரும் ரயில்வே […]

சிற்பங்கள் மற்றும் பிரம்மாண்ட கலைப்படைப்புகள் (Installations) மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார். உலகம் செய்தி

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் Yayoi Kusama காலமானார்

  • August 27, 2026
  • 0 Comments

சிற்பங்கள் மற்றும் பிரம்மாண்ட கலைப்படைப்புகள் (Installations) மூலம் உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய கலைஞர் (Avant-garde artist) யாயோய் குசாமா (Yayoi Kusama) தனது 97-வது வயதில் காலமானார். இத்தகவலை அவரது நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 14, 2026 அன்று டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் யாயோய் குசாமா காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தனது வாழ்நாள் முழுவதையும் கலை உருவாக்கத்திற்காக அர்ப்பணித்த குசாமா, காட்சிப் கலை […]

பாலியல் உறவின்போது ஆஸ்திரேலிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வலுக்கிறது எதிர்ப்பு ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலியல் உறவின்போது ஆஸ்திரேலிய சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: வலுக்கிறது எதிர்ப்பு

  • August 27, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பாலியல் உறவின் போது மூச்சுத்திணறல் ஏற்படுத்தப்பட்டதால் (Choking during sex) 16 வயது சிறுமி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிட்னியின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள எலனோரா ஹாய்ஸ்ட் (Elanora Heights) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமி சுயநினைவின்றி இருப்பதாக அவசர உதவிப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர், ஆபத்தான நிலையில் […]

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளத்தில் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு: 33 பிரித்தானியர்கள் மாயம்

  • August 27, 2026
  • 0 Comments

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றக்கணக்கானோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களில், சுமார் 400 வெளிநாட்டவர் உட்பட 579 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என நேபாள சுற்றுலாத்துறை […]

FIFA தொடர்களைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. செய்தி விளையாட்டு

FIFA தொடர்களை புறக்கணிக்கும் முடிவை கைவிட்டது UEFA

  • August 26, 2026
  • 0 Comments

FIFA தொடர்களைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை மீளப்பெறுவதற்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் (UEFA) தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின் (Gianni Infantino) திட்டம் இனி ஒருபோதும் முன்னெடுக்கப்படாது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டதையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய முடிவு மொனாக்கோவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள UEFA வின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. முன்னதாக, கடும் எதிர்ப்புகள் காரணமாக இன்பான்டினோவின் திட்டம் கைவிடப்பட்ட போதிலும், […]

அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மக்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கமாட்டோம்: ஜனாதிபதி அநுர உறுதி

  • August 26, 2026
  • 0 Comments

அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்நாட்டை வளர்ச்சியடைந்த, சிறந்த நாடாக கட்டியெழுப்புவதில் வேறு எந்த சக்தியையும் விட மக்கள் […]

ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புனோல் (Buñol) நகர வீதிகளில், நாட்டின் புகழ்பெற்ற கோடைகாலக் கொண்டாட்டமான 'லா தொமத்தினா' (La Tomatina) தக்காளித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் தக்காளி திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

  • August 26, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புனோல் (Buñol) நகர வீதிகளில், நாட்டின் புகழ்பெற்ற கோடைகாலக் கொண்டாட்டமான ‘லா தொமத்தினா’ (La Tomatina) தக்காளித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். புதன்கிழமை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தில், லொறிகள் மூலம் கொண்டுவரப்பட்ட சுமார் 165 தொன் பழுத்த தக்காளிகள் மக்கள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்டன. வெண்நிற ஆடைகளை அணிந்திருந்த மக்கள், பின்னணியில் ஒலித்த பாப் இசைக்கு ஏற்ப ஒருவர் மீது ஒருவர் […]

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செய்தி

அச்சம் வேண்டாம்: தாயகம் திரும்புங்கள்! இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு அழைப்பு!!

  • August 26, 2026
  • 0 Comments

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க […]

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்மீது அடக்குமுறை: சுமந்திரன் கடும் கண்டனம்

  • August 26, 2026
  • 0 Comments

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நேற்று யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட பொலிஸார், மாவட்ட […]

திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி- மீட்புப் பணி தீவிரம்

  • August 26, 2026
  • 0 Comments

திபெத் எல்லையை ஒட்டிய நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் கிராமங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கப் புதன்கிழமை ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லையின் மறுபக்கத்தில், சீனா – நேபாள இடையிலான நில எல்லையைக் சேற்றுச் சரிவு தாக்கியதில் திபெத்தின் கியிராங் (Gyirong) பகுதியில் “பெரும் உயிரிழப்புகளும்” பலர் காணாமல் போயுள்ளதாகவும் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் […]