நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு தொடர்பில் ஜேர்மனி வழக்கு பதிவு
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது ஜேர்மனி அதிகாரபூர்வமாக குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பால்டிக் கடலுக்கடியில் அமைந்திருந்த நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் சேதமாக்கப்பட்டது. அப்போது இந்த நாசக்கார சம்பவத்தை உக்ரைன் மேற்கொண்டதாக ரஷ்யா பரவலாக குற்றம் சாட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் 07 பேர் கொண்ட குழுவினர் இதில் தொடர்பு […]




