ஐரோப்பா

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு தொடர்பில் ஜேர்மனி வழக்கு பதிவு

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் மீது ஜேர்மனி அதிகாரபூர்வமாக குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பால்டிக் கடலுக்கடியில் அமைந்திருந்த நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் சேதமாக்கப்பட்டது.

அப்போது இந்த நாசக்கார சம்பவத்தை உக்ரைன் மேற்கொண்டதாக ரஷ்யா பரவலாக குற்றம் சாட்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் 07 பேர் கொண்ட குழுவினர் இதில் தொடர்பு பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் குறித்த 07 பேரை வழிநடத்தியதாக கூறப்படும் 56 வயதுடைய  செர்ஹி K என்ற நபர் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்  கடந்த   ஆண்டு இத்தாலியில் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக ஜேர்மனிக்கு நாடுகடத்தப்பட்டார்.

எவ்வாறாயினும் தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதா அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்