உலகம் செய்தி

விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

  • May 2, 2026
  • 0 Comments

போர் பதற்றத்தைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீக்கப்பட்டதையடுத்து, விமானப் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தொடர்புபட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக, தொடர்ச்சியான நிகழ்நேர […]

உலகம் செய்தி

மாலியில் இராணுவத் தளத் தாக்குதல் – இராணுவ வீரர்கள் மீது விசாரணை தீவிரம்

  • May 2, 2026
  • 0 Comments

மாலி (Mali) நாட்டில் கடந்த வாரம் பல இராணுவத் தளங்கள் மீது ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல்களுக்கு அல்கொய்தா (Al-Qaeda) தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமின் (JNIM) அமைப்பும், பிரிவினைவாதக் குழுக்களும் பொறுப்பேற்றுள்ளன. தலைநகர் பமாகோ (Bamako) அருகிலுள்ள இராணுவ நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், பணியில் உள்ள மூன்று இராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற ஒருவர் மற்றும் தாக்குதலில் கொல்லப்பட்ட […]

உலகம் செய்தி

அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன் ஹோர்முஸ் திறப்பு – ஈரான் புதிய முன்மொழிவு

  • May 2, 2026
  • 0 Comments

அணுசக்தி பேச்சுவார்த்தைகளை பின்னர் நடத்தி, முதலில் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைத் திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் வைத்துள்ளதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்துக்கு பெயர் குறிப்பிடாமல் கருத்து தெரிவித்த அந்த அதிகாரி, அமெரிக்கா ஈரான் மீதான முற்றுகை மற்றும் தடைகளை தளர்த்த வேண்டும் என்பதும், அதே நேரத்தில் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் பின்னர் நடைபெற வேண்டும் என்பதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என அவர் தெரிவித்தார். […]

இலங்கை செய்தி

இலங்கையில் பாரியளவான இணையவழி மோசடி- 37 சீனர்கள் கைது

  • May 2, 2026
  • 0 Comments

இணையதளத்தை பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கு 35 கணினிகள், 37 டெப் கணினிகள், 147 கையடக்கத்தொலைபேசிகள், 100 சிம் அட்டைகள் […]

உலகம் செய்தி

வியட்நாமுடன் அழமான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக ஜப்பான் பிரதமர் உறுதி

  • May 2, 2026
  • 0 Comments

ஜப்பானின் பிரதமர் சனே டகாயிச்சி (Sanae Takaichi), வியட்நாமுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை ஹனோய் (Hanoi) நகரில், வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் (Le Minh Hung) உடனை ஜப்பான் பிரதமர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஆறு […]

இந்தியா செய்தி

சிலிண்டர் விலை அதிகரிப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

  • May 2, 2026
  • 0 Comments

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளமை, உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சுமத்தியுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணியின் அடாவடி தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் […]

உலகம் செய்தி

லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

  • May 2, 2026
  • 0 Comments

லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார். நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, […]

ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தல் நிலை உயர்வு – லண்டனில் அமெரிக்கத் தூதரகம் விடுத்த அவசர எச்சரிக்கை

  • May 2, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை கடுமையான (Severe) நிலைக்கு உயர்த்தியதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் (US Embassy London), பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது இடங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் , பாடசாலைகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் போன்ற கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பயணிக்கும் நேரங்களையும் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளவும், தங்களை எளிதில் […]

உலகம் செய்தி

ஐரோப்பிய கார்கள் மீது 25% சுங்கவரி- ட்ரம்ப் அறிவிப்பு, வர்த்தக பதற்றம் அதிகரிப்பு

  • May 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா–ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது சுங்க வரியை 25% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ளார். “நாங்கள் முழுமையாக ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்றவில்லை” என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான குறிப்பான காரணங்களை அவர் விளக்கவில்லை. தற்போது நடைமுறையில் […]

உலகம் செய்தி

கருத்து கணிப்பைவிட மக்களின் தீர்ப்பே முக்கியம் – சுந்தர்.சி கருத்து 

  • May 1, 2026
  • 0 Comments

தேர்தல் கருத்து கணிப்பைவிட, மே 4 ஆம் திகதி வெளியாக உள்ள மக்களின் தீர்ப்பே முக்கியம் என நடிகரும் திரைப்பட இயக்குநருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, அவரது மனைவி குஷ்பு, மகள், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா ஆகியோர் இன்று பழநிக்கு சென்றனர். பழநி மலை அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் […]