உலகம் செய்தி

வியட்நாமுடன் அழமான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக ஜப்பான் பிரதமர் உறுதி

ஜப்பானின் பிரதமர் சனே டகாயிச்சி (Sanae Takaichi), வியட்நாமுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை ஹனோய் (Hanoi) நகரில், வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் (Le Minh Hung) உடனை ஜப்பான் பிரதமர் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சந்திப்புக்குப் பிறகு கருத்து தெரிவித்த டகாயிச்சி, பொருளாதார பாதுகாப்பு இரு நாடுகளின் புதிய முன்னுரிமை துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முக்கிய கனிமங்களின் நிலையான விநியோகம் மற்றும் விநியோகச் சங்கிலி வலுப்படுத்தல் குறித்து இரு தரப்பும் நெருங்கிய ஒத்துழைப்புக்கு  ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

வியட்நாம் தரப்பும், தென் சீனக் கடல் தொடர்பான சர்ச்சைகளை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைதியான

முறையில் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடலில் சீனாவின் பிராந்தியக் கோரிக்கைகள் குறித்து இரு நாடுகளும் கவலை வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தும் இடையூறுகளை எதிர்கொள்ளவும், இரு நாடுகளும் தங்கள் பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையை விரிவுபடுத்த முயற்சி செய்து வருகின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!