இலங்கை செய்தி

14 இந்திய மீனவர்களுக்கு 22 ஆம் திகதி வரை விளக்கமறியல்

  • April 17, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மன்னார் வடக்கு, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த நிலையில், கடந்த 9ஆம் திகதி 10 மீனவர்களும், அதனைத் தொடர்ந்து 14ஆம் திகதி 4 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் […]

இலங்கை செய்தி

தையிட்டி காணி அளவீடு மே 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் பணிகள், விகாராதிபதியின் எதிர்ப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரையைச் சூழவுள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்வதற்கு, கடந்த 11 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இணங்குமாறு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் யாழ். […]

அரசியல் இலங்கை செய்தி

திடீர் பதவி விலகலுக்கு காரணம் என்ன? வெளியானது பின்புலம்!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (17) கையளித்து, பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டது. இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் பரபரப்பு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே இவர்கள் பதவி விலகியுள்ளனர் என தெரியவருகின்றது. நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இது தொடர்பில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகூட முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளனர்.

உலகம் செய்தி

லெபனான் போர் நிறுத்தம்: ட்ரப்பை போற்றி புகழ்கிறது பாகிஸ்தான்!

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் Shehbaz Sharif வரவேற்றுள்ளார். குறித்த நடவடிக்கை அப்பகுதியில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட துணிச்சலான இராஜதந்திர முயற்சிகளால் இந்த அமைதி உடன்படிக்கை சாத்தியமானதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பாகிஸ்தான் தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளை […]

இலங்கை செய்தி

யாழில் தாக்குதல் முறியடிப்பு: வாள்களுடன் மூவர் கைது!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளனர். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வன்முறை கும்பல் தயாராகிக்கொண்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை தாமதிப்பது பெரும் அநீதி!

  • April 17, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும், வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.” இவ்வாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக, தெரிவுக் குழுவின் செயல்முறையின் முடிவுகளுக்காக ஆணைக்குழு காத்திருக்கிறது. தெரிவுக் குழுவின் முடிவின் அடிப்படையிலேயே, தேர்தல்களை நடத்துவது குறித்து எங்களால் தீர்மானிக்க முடியும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவும், தெரிவுக்குழுவின் முன் […]

பொழுதுபோக்கு

கதாநாயகியாக களமிறங்கும் வனிதாவின் மகள்!

  • April 17, 2026
  • 0 Comments

வனிதாவின் மகள் ஜோவிகா நடித்திருக்கும் முதல் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் ஜோவிகா, எனது முதல் திரைப்படம். அதுவும் தெலுங்கில் MS Raju அவர்களுடன் நேரடியாகப் பணியாற்றுவது, நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் போற்றும் ஒரு அனுபவமாகும். குறிப்பாக, ‘தேவி’, ‘வர்ஷம்’, ‘ஒக்கடு’ இன்னும் பல படங்களை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்பப் பார்த்து வளர்ந்தவள் நான், எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். என்னை நீங்கள் நம்பி, என் மீது […]

உலகம் செய்தி

“அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்

  • April 17, 2026
  • 0 Comments

“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு, “ஈரான் உடனான அமைதிப் பேச்சு சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் […]

இலங்கை செய்தி

பற்றி எரிந்த வீடுகள்: நுவரெலியாவில் நடந்தது என்ன?

  • April 17, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு (16) ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. மூன்று வீடுகளில் வசித்த 12 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்கவைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்தால் வீடுகளில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளன. நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்குரிய விசாரணை ஆரம்பமாகியுள்ளது.