யாழில் தாக்குதல் முறியடிப்பு: வாள்களுடன் மூவர் கைது!
யாழ் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளனர்.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வன்முறை கும்பல் தயாராகிக்கொண்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.





