இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை தாமதிப்பது பெரும் அநீதி!

Chief of Sri Lanka’s election commission R.M.A.L. Rathnayake speaks during a media briefing ahead of presidential election in Colombo, Sri Lanka, Thursday, Sept. 19, 2024. (AP Photo/Eranga Jayawardena)

“மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தொடரும் தாமதம் வாக்காளர்களுக்கும், வருங்கால பிரதிநிதிகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.”

இவ்வாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க
தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன்னதாக, தெரிவுக் குழுவின் செயல்முறையின் முடிவுகளுக்காக ஆணைக்குழு காத்திருக்கிறது.

தெரிவுக் குழுவின் முடிவின் அடிப்படையிலேயே, தேர்தல்களை நடத்துவது குறித்து எங்களால் தீர்மானிக்க முடியும்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவும், தெரிவுக்குழுவின் முன் வரவழைக்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

அது தனது நடவடிக்கைகளை முடித்து, பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதுவரை என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. தற்போதைக்கு, எங்களால் எதுவும் செய்ய முடியாது.

மாகாண சபைத் தேர்தல்கள் கடைசியாக 2014இல் நடத்தப்பட்டன , ஒரு பத்தாண்டுக்கும் மேலாக தேர்தல்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவது வாக்காளர்களுக்கும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புபவர்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

இதுகுறித்து தெளிவு கோரி, ஜனாதிபதி செயலாளருக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி வருகிறோம்.

இதுகுறித்து தெரிவுக்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாக அவர் அண்மையில் எங்களுக்குத் தெரிவித்தார்.” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை