தெற்கு அரசியலில் பரபரப்பு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே இவர்கள் பதவி விலகியுள்ளனர் என தெரியவருகின்றது.
நிலக்கரி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இது தொடர்பில் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகூட முன்வைக்கப்பட்டது. அப்பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளனர்.





