NPP ஆட்சியில் இப்படி நடந்திருக்கவே கூடாது: அமைச்சர் ஆதங்கம்
“நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் போன்றதொரு சம்பவம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருக்கவே கூடாது. எனினும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு: “நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவமானது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகும். வறுமை எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு கல்வி பின்தங்கியிருக்கும். இவ்வாறு வறுமையும் கல்வியறிவும் பின்தங்கியுள்ள […]













