உலகம்

முதலீட்டு திட்டங்களுக்கு எதிர்ப்பு – டொரெண்டோவில் மக்கள் பேரணி

கனடா பிரதமர் மார்க் கார்னி நடத்திய முதலீட்டு உச்சி மாநாட்டிற்கு எதிராக, டொரெண்டோ நகரின் மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

புதைபடிவ எரிபொருள் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தல், இராணுவ உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பொதுச் சொத்துக்களின் மீதான அதிகக் கட்டுப்பாட்டைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்களை  எதிர்ப்பதாகப் போராட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர், புலம்பெயர்ந்தோர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதிக் குழுக்கள் கலந்துகொண்டன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டின் ஏற்றுமதிகள் மீது விதித்துள்ள வரிகளை எதிர்த்து பிரதமர் கார்னி பல்வேறு முதலீட்டுகளை ஈர்க்க போராடி வருகின்றார்.

இதற்கு கனேடியர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்